OUR CLIENTS
காந்தி சிலையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
காந்தி சிலையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை! Posted on 02-Aug-2018 காந்தி சிலையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

திருவள்ளூர், ஆக.2-

ஊத்துக்கோட்டை ஊராட்சியில் பழைய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலையை அங்கிருந்து அகற்றி புதிய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தமிழக & ஆந்திர எல்லைப் பகுதியான ஊத்துக்கோட்டையில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த பழைய அலுவலக வளாகத்தில் காந்தியடிகளின் சிலை உள்ளது. தற்போது அந்தக் கட்டடம் பொது ஏலத்தில் ஓட்டலாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அந்த இடத்தில் காந்தியடிகளின் சிலை இருப்பது அவரது பெருமைக்கு ஏற்புடையதல்ல; ஏனெனில் ஓட்டலுக்கு வருபவர்களால் காந்தியடிகளின் சிலைக்கு குந்தகம் ஏற்படுவதாலும், சிலை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு பராமரிக்கப்படாமல் இருப்பதாலும் இந்த சிலையை அகற்ற வேண்டும்‘ என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிங்கி ரெட்டியார் பொதுச் சேவை அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாகிகள் கோபி, யுவராஜ், செல்வப் பெருமாள் தலைமையில் அமைப்பினர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமாரிடம் இது குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர். 
அதில், காந்தியடிகளின் சிலையை பழைய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து புதிய பேரூராட்சி அலுவலக வளாகத்திற்கு மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Label