OUR CLIENTS
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! Posted on 03-Aug-2018 வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

புதுடெல்லி, ஆக. 3-

ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்காக வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லோக்சபாவில் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர்  சி.ஆர்.சவுத்ரி கூறியதாவது: பொது விநியோக முறையில் உணவு தானியங்களை நேரடியாக விநியோகிக்கும் முறையை மேற்கொள்ள தேவையான சீர்திருத் தங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் பிரிவு 12 கூறுகிறது. ஒரு மாநிலத்திற்கான மத்திய அரசின் டெப்போவில் இருந்து உணவு தானியங்களை  ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் மாநில அரசு விநியோகிக்க வேண்டும் எனவும் பிரிவு 24 கூறுகிறது. 

தற்போது இந்த முறை பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்ல இயலாத நுகர்வோருக்கு அவற்றை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் சுய முயற்சியில் உணவு தானியங்களை கொண்டு செல்கின்றன.

சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏதுவாக, சர்க்கரை ஆலைகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.5.50 வீதம் ரூ.1540 கோடி வழங்கப்படும் சர்க்கரை ஆலைகளில் எரிசாராய ஆலைகளை அமைக்க ரூ.4440 கோடி கடனுதவி வழங்கப்படும். இதில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவான கொதி கலன்களை அமைப்பதற்கு வட்டி சலுகையாக ரூ.1332 கோடி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Label