OUR CLIENTS
தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை முடிவு செய்யலாம்! மம்தா பானர்ஜி அதிரடி பேட்டி
தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை முடிவு செய்யலாம்! மம்தா பானர்ஜி அதிரடி பேட்டி Posted on 03-Aug-2018 தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை முடிவு செய்யலாம்! மம்தா பானர்ஜி அதிரடி பேட்டி

புதுடெல்லி, ஆக. 3-

முதலில் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என்று மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூட்டாட்சி முன்னணி என்ற ஒரு புதிய முன்னணியை தோற்றுவித்துள்ளார். இந்த அமைப்புக்கு ஆதரவு திரட்டும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது கூட்டாட்சி முன்னணி சார்பில் 19&ந்தேதி நடத்தப்பட இருக்கும் பேரணி பற்றி விளக்கமாக எடுத்து கூறினார். அதன்பிறகு மேலும் 9 கட்சி தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்தார். இதனால் மம்தா பானர்ஜி புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி அளித்த பதில் வருமாறு:& எனக்கு பிரதமர் ஆக வேண்மென்று எந்த ஆசையும், லட்சியமும் இல்லை. எனது முதன்மையான நோக்கம் என்னவென்றால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் நான் பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறேன். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. அப்படி இருக்கும் போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும், ஏன் ஒன்று சேர்ந்து போராட முடியாது. எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து வருவதால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது பா.ஜ.க. தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் அவர்கள் எதிர் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எதிர் கட்சி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பதில் பிரச்சினை இல்லை. கூட்டுத் தலைமையை ஏற்படுத்தலாமா? என்று நன்கு ஆலோசித்து வருகிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதில் முழு வடிவம் கிடைக்கும். எனவே பிரதமர் யார் என்பதில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யலாம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Label