OUR CLIENTS
நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம்! மத்திய அமைச்சர் கருத்து
நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம்! மத்திய அமைச்சர் கருத்து Posted on 03-Aug-2018 நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம்! மத்திய அமைச்சர் கருத்து

புதுடெல்லி, ஆக. 3-

நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் என மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் உரையாற்றினார். இதில் பேசிய அவர்,” நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக மக்கள் அபரிமிதமான ஆதரவு தெரிவித்து உள்ளனர். நியூட்ரினோ திட்டம் அமைப்பது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது” என்று தெரிவித்தார்.

மேலும்,”இதுகுறித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது” என்று கூறினார்.
”நில அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடமாக விளங்குகிறது” என்று இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Label