OUR CLIENTS
நாங்கள் இருக்கும்வரை வடக்கு கர்நாடகா பிரிக்கப்படாது!
நாங்கள் இருக்கும்வரை வடக்கு கர்நாடகா பிரிக்கப்படாது! Posted on 03-Aug-2018 நாங்கள் இருக்கும்வரை வடக்கு கர்நாடகா பிரிக்கப்படாது!

புதுடெல்லி, ஆக. 3-

தானும் தன் மகனும் இருக்கும் வரை வடக்கு கர்நாடகா தனி மாநிலமாக பிரிக்கப்படாது என முன்னாள் பிரதமரும் மதர்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா உறுதியளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வடக்கு கர்நாடகா தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்று உத்தர கர்நாடகா பிரத்யேக ராஜ்ய ஹோரதா சமிதி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள 13 மாவட்டங்களுக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர்,
”மாநில பட்ஜெட்டில் வடக்கு கர்நாடகாவிற்கு சரியான அளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படவில்லை. மாநில முதல்வராக ஆக முடியாததால் பாஜக தலைவர் எடியூரப்பா கோபமாக இருக்கிறார். அவர் கோபம் இன்னும் தீரவில்லை. மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்க தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்” என்று சாடினார்.

மேலும்,”எடியூரப்பா நினைப்பது எதுவும் நடக்காது. நாங்கள் அதை பார்த்துக் கொள்வோம். மக்கள் சிலர் தனி வடக்கு கர்நாடகா வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு நான் ஒன்று கூறுகிறேன். நானும் எனது மகன் குமாரசாமியும் இருக்கும் வரை அது நடக்காது. மாநிலத்தில் வன்முறையை தூண்ட எண்ணுபவர்களுக்கு இரையாகி விடாதீர்கள்” என்று மக்களை தேவகவுடா கேட்டுக்கொண்டார்.

Label