OUR CLIENTS
நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு!
நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு! Posted on 03-Aug-2018 நாளை கூடுகிறது  காங்கிரஸ் செயற்குழு!

புதுடெல்லி, ஆக. 3-

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களை சமீபத்தில் ராகுல் காந்தி மாற்றி அமைத்தார். புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் 22-ந்தேதி டெல்லியில் நடந்தது.

கூட்டத்தில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி மற்றும் பிரசார வியூகம் பற்றி பேசப்பட்டது. அப்போது கூட்டணி முடிவெடுக்க ராகுலுக்கு அதிகாரம் கொடுத்து செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தோழமை கட்சிகளிடம் இருந்து ராகுலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. காங்கிரஸ் தலைமையை ஏற்க சில கட்சிகள் தயங்கியபடியே உள்ளன. இதையடுத்து பிரதமர் பதவியையும் விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய பொருளாதார அரசியல் சூழ்நிலை பற்றி விவாதிக்கப் படுகிறது. குறிப்பாக ரபேல் விமான கொள்முதலில் செய்யப்பட்ட ஒப்பந்த முறைகேடுகள் பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை எந்த வகையில் முன்னெடுத்து செல்வது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. பிரசாரத்தின் போது ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் தேசிய குடி மக்கள் பதிவேடு பட்டியலை வெளியிட்டதன் மூலம் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

பிரசாரம் வியூகம் தவிர எந்தெந்த கட்சிகளை கண்டிப்பாக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் செயற்குழு கூட்டத்தில் பேசப்பட உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக வெற்றியை பெற வேண்டும் என்பதுதான் மாயாவதியை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எப்படி கொண்டு வருவது என்பது பற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் பேச உள்ளனர். செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் இருந்து ராகுல் சில புதிய நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Label