OUR CLIENTS
வேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா?
வேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா? Posted on 03-Aug-2018 வேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா?

வேலூர், ஆக. 3-

ஆந்திர மாநிலத்தில் இருந்து சித்தூர் வழியாக தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் பழைய பாலாற்று பாலம் வழியாகத்தான் வேலூருக்குள் வரவேண்டும். பழையபாலாற்று பாலம் பழுதாகியுள்ளதால் தினமும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டபடி பழைய பாலாற்று பாலத்தில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு பாலத்தை புதுப்பிக்கப்போவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து அதன்படியே போக்குவரத்தையும் நிறுத்தினர். சில மணிநேரங்களுக்கு மட்டுமே பழைய பாலாற்று பாலத்தில் போக்குவரத்தை தடைசெய்து வைக்க முடிந்தது. அதற்குள்ளாக புது பாலாற்றுப்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே பகலில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இரவில் தடை செய்யப்பட்டு மராமத்து பனிகள் நடைபெற்றது. பாலத்தின் ஒவ்வொரு பகுதியையும் உயர்த்தி பாலத்துக்கும் அடியில் உள்ள தூணுக்கும் இடையில் உள்ள ரப்பர் பேட் மாற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து இயங்கியது.

இந்த மராமத்து பணிகளின்போது பாலத்தின் மேலே வாகனங்கள் செல்லும் சாலைப்பகுதியின் ஒருபகுதியில் நான்கு அடி நீளத்துக்கு உடைந்துள்ளது. இந்த இடத்தில் போக்குவரத்து தங்குதடையின்றி செல்ல முடியாதவாறு அப்பகுதியில் குறுகலான இடமாக மாறியுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்வது சிரமமாகிறது. இந்நிலையில் அலுவலக நேரத்தில் கடும் போக்ககுவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். பாலத்தின் உடைந்த பகுதியை இரும்பு பலகை வைத்து மூடிவைத்தனர். அதை கடக்கும்போது திடீரென வரும் சப்தத்தால் வாகன ஓட்டிகள் மிரண்டனர்.

அந்த பலகையை மாற்றி தற்போது கான்கிரீட் போட்டுள்ளனர். அது எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிக்கும் என தெரியவில்லை. பாலத்துக்கு நிரந்தரத்தீர்வு வேண்டும் என சொல்லி மக்கள் புலம்புகின்றனர். பாலத்தைப் புதுப்பிப்பதைக் காட்டிலும் பாலத்தை அகலப்படுத்தினால் நல்லது என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் எண்ணம் நிறைவேறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label