OUR CLIENTS
பெண்கள் பாதுகாப்பு முகாம்!
பெண்கள் பாதுகாப்பு முகாம்! Posted on 03-Aug-2018 பெண்கள் பாதுகாப்பு முகாம்!

வேலூர், ஆக. 3-

அகில இந்திய மாணவர்கள் பொதுநலச் சங்கம் சார்பாக வேலூர் மாநகராட்சி வேலப்பாடி பகுதியில் அமைந்துள்ள விநாயக முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை  9.45 மணி அளவில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

வளர் இளம்  பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அகில இந்திய மாணவர்கள் பொதுநலச் சங்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  கே..பாஸ்கரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் என்.ராமநாதன் மற்றும் வேலூர் மாநகர் நல அலுவலர் டி.மணிவண்ணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவக் குழுவினர், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள்,  பள்ளி மாணவிகள் 1856 பேர் கலந்து கொண்டனர். அகில இந்திய மாணவர்கள் பொதுநலச் சங்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Label