OUR CLIENTS
உரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு!
உரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு! Posted on 09-Aug-2018 உரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு!

மதுரை, ஆக. 9-

அரசு இ சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் கடைகள் தொடங்க உரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருக்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

மருந்து கடைகள் தொடங்க 12 வகையான சான்றுகளுடன் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வணிகர்கள் விண்ணப்பிப்பர். கட்டணம் மூவாயிரத்தை வங்கி வரைவோலையாக வழங்குவர். மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலித்து இதுவரை உரிமம் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் ஜூலை 23 முதல் மருந்து கடைகள் உரிமம் பெற தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு இ சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அனுப்ப அரசு உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தில் மருந்து கடைகள் உரிமம் பெற இ சேவை மையங்களை வணிகர்கள் தொடர்பு கொண்டால் தங்களுக்கு இதுகுறித்து தகவலும் வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மூன்று வாரங்களாக உரிமம் பெற முடியாமல் வணிகர்கள் காத்திருக்கின்றனர். மதுரை கெமிஸ்ட்ஸ், டிரக்கிஸ்ட்ஸ் அசோசியேஷன் செயலர் சரவணன், நிர்வாகி சீனிவாசன் கூறியதாவது: இ சேவை மையங்களில் மருந்து கடைகளுக்கு உரிமம் வழங்க தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முறையான பயிற்சி பெற்ற பிறகு தான் உரிமம் வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

அவர்கள் பயிற்சி பெற்று உரிமம் வழங்க அரசிடமிருந்து உத்தரவு இல்லை. இதனால் மருந்து வணிகர்கள் உரிமம் பெற காத்திருக்கின்றனர். ஆன்லைனில் உரிமம் வழங்கும் வரை முன்பிருந்த நடைமுறையை பின்பற்ற அரசு உத்தரவிட வேண்டும், என்றனர்.

Label