OUR CLIENTS
மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும்
மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் Posted on 15-Aug-2018 மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும்

புதுடெல்லி, ஆக. 15-

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இந்த ஆண்டு நடைபெற வுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என சி வோட்டர் மற்றும் ஏபிபி செய்தி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மூன்று மாநிலங்களில் தோல்வி அடைந்தாலும் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு காரணமாக வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின் விவரம் பின்வருமாறு: சுமார் 28,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் மத்திய அரசுக்கு வாக்களிப்பதிலும் மாநில அரசுக்கு வாக்களிப்பதிலும் மக்கள் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர்.

பிரதமர் வேட்பாளராக பெரும்பாலானோர் மோடிக்கு தான் அதிக முன்னுரிமை அளித்துள்ளனர். அதற்கு அடுத்தப் படியாக மோடியை விட மிகவும் குறைவான சதவீதம் பேர் ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் பான்மையான இடங்களில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.  

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் 130 இடங்களையும் பாஜக 57 இடங்களையும் கைப்பற்றும். மத்திய பிரதேசத்தில் உள்ள 231 இடங்களில் காங்கிரஸ் 117 இடங்களையும் பாஜக 106 இடங்களிலும் வெற்றி பெறும். சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 54 இடங்களிலும் பாஜக 33 இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த மூன்று மாநிலங்களிலும் 65 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Label