OUR CLIENTS
அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்!
அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்! Posted on 15-Aug-2018 அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்!

வேலூர், ஆக. 15-

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவுதான் அண்ணா தொழிற்சங்கம். இன்று அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாய நிலைக்கு வந்துவிட்டது.

அதிமுக ஓட்டு வங்கிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கமும் ஒவ்று என்றே சொல்லலாம். ஆனால் இன்றோ அந்த சங்கத்தின் செயற்பாடுகள் எதுவுமே சரியில்லததால் அந்த சங்ககே சுக்கு நூறாக உடைந்து போகும் நிலைமையில் உள்ளது. எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் தற்போது கோஷ்டி பூசலால் அண்ணா தொழிற்சங்கத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மொத்தம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 8 மண்டலத்திலும் பணியில் இருந்து பலர் ஓய்வு பெற்ற பிறகும் அந்த பதவிக்கான பொறுப்புகள் இனும் நிரப்பப்படவில்லை.

உதாரணமாக காரைக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மண்டலத்தில் செயலாளர்கள் நிரப்பப்படாமல் உள்ளனர். விழுப்புரம் கோட்டத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் என்று 3 பொறுப்புகளுமே காலியாகத்தான் உள்ளன. வேலூர், காஞ்சிபுரம் கோட்டத்தில் பொருளாளர், செயலாளர் இல்லை. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக கோட்டத்திலும் செயலாளர் இல்லை. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள கிளைச்சங்கங்களிலும் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் அந்த இடங்களில் இன்னும் பொறுப்புகள் நிரப்படவே இல்லை. அதேபோல் போக்குவரத்து பிரிவில் தலைவர் மகேந்திரன், பொருளாளர் பரமசிவன், செயலாளர் பழனி ஆகிய 3 பேரும் பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். இதில் பரமசிவன் டிடிவி தினகரன் அணிக்கு சென்றுவிட்டார்.

ஆகையால் காலியாக உள்ள இந்த 3 பதவிகளுக்கும் வேறு நபர்களை நியமிக்கவே இல்லை, இதனால் பொருளாளர், செயலாளர் பதவிகளில் இன்னமும் ஓய்வுபெற்ற மகேந்திரன், பழனி ஆகியோரை இருக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்கிறர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள்.

திருச்சி மண்டல செயலாளராக இருப்பவர் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன். இவருக்கு பொறுப்பு வர காரணமானவர் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளராக இருந்த சின்னசாமி. ஜெகதீசன் தற்போது டிக்கெட் பரிசோதகராக உள்ளார். இவர் வரும் 10ம் மாதம் பணி ஓய்வு பெற போகிறாராம். இதனால் பதவியோடு பணி ஓய்வு பெற விரும்புகிறாராம் ஜெகதீசன் என்று கூறப்படுகிறது. இவர் மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அம்மா மாளிகையில் ஒரே குடியும் கும்மாளமுமாக இருக்கிறாராம். தான் ஓய்வுபெறப் போகும் நேரத்தில் இந்த சங்கத்தை காவிரி ஆற்றில் கரைத்து விட வேண்டும் என்ற முடிவோடு செயல்பட்டு கொண்டிருக்கிறாராம். இதனால் பல நிர்வாகிகள் தலைமைக்கு புகார் மனு அனுப்பினர். ஆனால் புகார் மனு மீது கடந்த மாதம் 25ம் தேதி விசாரணை நடந்தது. இதனால் ஜெகதீசன் மற்றும் சக்திவேல் மீது தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தொழிற்சங்கத்தினர். 

அண்ணா திருச்சி கோட்ட நிர்வாக பணியாளர் சங்க செயலாளராக இருப்பவர் கரூர் மாரியப்பன். இவரை கண்டாலே சங்கத்தில் உள்ள பலரும் அஞ்சி நடுங்குகின்றனர். காரணம் அவர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி பல வகைகளிலும் மிரட்டியே தொழிலாளர்களிடம் பணம் பறித்து வருகிறாராம். பணியிட மாற்றம் என்றால் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொடுத்தால்தான் செய்கிறாராம். தானாக பணியிட மாற்றம் வந்தாலும் அவர்களிடமும் ரூ.30 ஆயிரத்தை மிரட்டி கறந்து விடுகிறாராம். மாரியப்பனுக்கு ஒரு பெரும்படையே புரோக்கர்களாக செயல்படுகிறார்களாம். திருச்சி கோட்டத்தில் மிரட்டல் போக்கு தொடர்வதாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரை கண்டுகொள்வதே இல்லையாம். அண்ணா தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஜக்கையன். அவருக்கு கீழ் மாநில குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் தாடி மா.ராசு, சங்கரதாஸ், யூ.ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே. இதில் மாநில குழு உறுப்பினர்களின் வேலையே வசூல் வேட்டையாடுவதுதானாம். தொழிலாளர் பிரச்னைகளை கண்டுகொள்வதே இல்லையாம். முன்னாள் அரசு விரைவு போக்குவரத்து கழக துணை செயலாளர் சந்திரமோகன் ஜக்கையனிடம் சொல்லி பதவி வாங்கி தருவதாக கூறி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பலரிடமும் பணம் பிடுங்கி வருகிறாராம். இந்த தகவல் ஜக்கையனுக்கு தெரியாது என்பது வேதனையான உண்மையாகும்.

கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் ரவீந்திரனிடம் பணம் கொடுத்தால் போதும் இறந்தவனுக்கு கூட அப்பாய்மென்ட் ஆர்டர், பணியிடமாறுதல் ஆணை கூட வழங்கவிடுவாராம். மற்ற விஷயங்களில் எப்படியெல்லாம் இருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா. இப்படி அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகிகள் நிரப்பப்படாததாலும் இருக்கின்ற நிர்வாகிகள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாலும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த பலரும் டிடிவி அணி, திருமாவளவன் அணி என்ற பல அணிகளுக்கு செல்ல தயாராகி இருப்பதோடு நாம் தமிழர் அணி மற்றும் கெஜ்ரிவால் அணி என்று பல புதிய அணிகளையும் தொடங்க தயாராக இருக்கிறார்களாம்.

ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணா தொழிற்சங்க நிர்வாகத்தில் தலையிட்டு அண்ணா தொழிற்சங்கத்தை காப்பாற்ற வேண்டும். மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஜக்கையன், தொழிற்சங்க நிர்வாகிகள் விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும். இனி அண்ணா தொழிற்சங்கத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. இதற்கு அதிமுக தலைமை என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label