OUR CLIENTS
அத்துமீறி மணல் திருட்டு தாசில்தாரிடம் புகார் மனு!
அத்துமீறி மணல் திருட்டு தாசில்தாரிடம் புகார் மனு! Posted on 15-Aug-2018 அத்துமீறி மணல் திருட்டு தாசில்தாரிடம் புகார் மனு!

வேலூர், ஆக. 15-

அம்பாலால் ரியல் எஸ்டேட் நிறுவனர் கே.ஜவுரிலால் ஜெயின் அத்துமீறி மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார் மற்றும் தெருவழியை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என சேன்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்  என்.கர்ணல் என்பவர் வேலூர் தாசில்தார் ரமேஷிடம் புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.  

வேலூர் மாவட்டம், வேலூரைச் சார்ந்த என்.கர்ணல் என்பவர் 1998ம் ஆண்டு நவாப் அலிகான் என்பவரிடம் வடவேலூரைச் சேர்ந்த சில சர்வே எண்ணுடைய சொத்துக்களை விக்கிரையம் செய்தார். மதிப்புக்குறைவு காரணத்திற்காக அசல் ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47ஏ(1)-ன் கீழ் நடவடிக்கையில் தற்போது உள்ளது.  

என்னுடைய நிலத்தை பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் எஸ¢.சையத¢ ஷா ஹ¤லால¢ அகமத¢ காதா¤ சாஹெப¢ என்பவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பொது அதிகாரம் வழங்கினேன்.  
இந்நிலையில் என்னுடைய இடத்தை பராமரித்து வருவதாக கூறி, எஸ¢.சையத¢ ஷா ஹ¤லால¢ அகமத¢ காதா¤ சாஹெப¢ மற்றும் அவருடைய சகோதரரும் அசரத் மக்கானுக்குச் சொந்தமானது என்று என்னுடைய நிலத்தை  பொய்யாக பாகப்பிரிவினை பத்திரமாக பதிவு செய்து கே. ஜவரிலால் ஜெயினுக்கு 2005ல் விற்பனை செய்துள்ளனர்.   

இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47ஏ(1)-ன் கீழ் பதிவு செய்துள்ள புல எண்கள் பத்திர பதிவு செய்ய இயலாது எனவும், பின்னர் எவ்வாறு  பதிவு நடைபெற்றது எனவும் பத்திரப் பதிவு துறை மீது கேள்வி எழுப்பி உள்ளார்.  மேலும் அசரத் மக்கான் சொத்து என பாகப்பிரிவினையில் குறிப்பிட்டுள்ளனர். 
அவ்வாறு இருக்கையில் சம்மந்தமில்லாத சொத்தை எவ்வாறு  சொந்தமான சொத்து என்று பாகப்பிரிவினை செய்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார் 

இந்நிலையில், சொத்து தொடா¢பான ஆவண விபரம் வில்லங்க சான்று பாராமல் எவ்வாறு கே. ஜவரிலால் ஜெயின்  மேற்குறிப்பிட்ட நிலத்தை வாங்கியுள்ளார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.  
நில அபகரிக்கும் நோக்கில் சத்தமின்றி போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கின்றனர். இது குறித்து, தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியருக்கு மற்றும் பத்திரப்பதிவு துறை ஐஜிக்கும்  புகார் மனு அளித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அம்பலால் நிறுவனர், எனக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து இரவில் அங்கிருந்த மணலை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் நேற்று மனு அளித்தார். மேலும் மணல் திருட்டு நடக்காமல் தடுத்து எனக்கு உரிமையான இடத்தில் யாரும் அத்துமீறி நுழையாதவாறு தடுக்கக்கோரி மனு அளித்துள்ளேன். இவ்வாறு என். கர்ணல் தனது மனுவில் கூறியுள்ளார். 
இதுகுறித்து வேலூர் தாசில்தார் ரமேஷ் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  
இச்சம்பவம் வேலூர் பொதுமக்கள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label