OUR CLIENTS
கருணாநிதி நினைவிட பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
கருணாநிதி நினைவிட பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் Posted on 15-Aug-2018 கருணாநிதி நினைவிட பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை,  ஆக. 15
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிட பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை மெரினாவில் திமுக தலைவரின் உடலை அடக்கம் செய்ய இடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இடம் கொடுக்கப்பட்டுவிட்டதால் பிரச்னை முடிந்துவிட்டது. கருணாநிதி நினைவிட பிரச்னை முடிந்துவிட்டதால் அதை அரசியலாக்க வேண்டாம் என்றார்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும்.  இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை உயர்மட்ட குழு முடிவு செய்யும். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு. கருணாநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னையில் காலமானார். பல போராட்டங்களுக்கு பிறகு, சென்னை – மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Label