OUR CLIENTS
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி Posted on 15-Aug-2018 சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி

சென்னை, ஆக. 15
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினார்.
72-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணியளவில் சென்னை கோட்டைக்கு வந்தார். நேற்று இரவு தொடங்கிய மழை காலையிலும் தொடர்ந்தது. கொட்டும் மழையில் தேசியக்கொடியேற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார் முதல்வர் பழனிசாமி.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டாவது ஆண்டாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார்.
வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை  முதல்வர் பழனிசாமி ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திர தின உரையாற்றினார். தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை அவர் வழங்கி கவுரவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வருகின்றனர்.

Label