OUR CLIENTS
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு Posted on 15-Aug-2018 தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஆக. 15
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று சென்னை செயிண்ட் ஜார்ஜ கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் பொழுது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  இன்று அறிவித்தார்.
நாடு முழுவதும் 72வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தேசியக் கொடியை ஏற்றிய பின் சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழக அரசு, விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும்
• தேசிய அளவிலான முதுநிலைப் போட்டிகளில், தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ;
• நமது மாநிலம் சார்பாக நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ;
• அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அல்லது நமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டால் கூட, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில், தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு இந்த உள் ஓதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என  முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 13,000த்திலிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 6500லிருந்து ரூ. 7500 ஆக உயர்த்தப்படும் என்றும் வாரிசுதாரர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6500லிருந்து ரூ. 7500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்தார்.
71 ஆண்டுகளில் எட்டிய முன்னேற்றத்தை திரும்பிப் பார்க்கும் நேரம் இது எனக் கூறிய முதல்வர், தனது பணியேற்றிய நாளில் இருந்து ரூ. 22 ஆயிரத்து 439 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 41,031 திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டார். 16 ஆயிரத்து 689 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 ஆயிரத்து 596 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருப்பதாகவும் கூறினார்.
விவசாயம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயத்துக்கான நீர் பராமரிப்பு, குடிநீர் விநியோகம், நீதி நிர்வாகம், மகளிர் நலம், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளை முதல்வர் பழனிசாமி விளக்கமாகக் குறிப்பிட்டார்.

Label