OUR CLIENTS
சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து நிகழ்ச்சி! முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து நிகழ்ச்சி! முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு Posted on 16-Aug-2018 சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு,  சமபந்தி விருந்து நிகழ்ச்சி! முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சென்னை, ஆக. 16-

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து சென்னையில் பல இடங்களில் நடைபெற்றது. சென்னை கே.கே. நகர் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திருவான்மியூர் ௹ மருந்தீசுவர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்துகொண்டார்.
சட்டமன்ற பேரவைத் தலைவர் ப. தனபால், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்துகொண்டார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ,  சென்னை அரண்மனைக்காரன் தெரு அருள்மிகு கச்சாலீசுவரர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்து கொண்டார். அமைச்சர்  சேவூர் எஸ். இராமச்சந்திரன், மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்துகொண்டார்.

அடையாறில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி செல்லும் மாணவிகள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், ரகசியம் காக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட் டையன் தெரிவித்தார்.

அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்து கொண்டார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கோயம்பேடு அருள்மிகு குறுங் காலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்துகொண்டார்.

Label