OUR CLIENTS
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார் Posted on 16-Aug-2018 முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார்

புதுடில்லி, ஆக. 16-

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.

93 வயதாகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதய நோய் பாதிப்பைத் தொடர்ந்து அவர் தனது இல்லத்திலேயே இருந்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய்க்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வந்தது.

நாளாக நாளாக மறதி மற்றும் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டார். அரசியல் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக, கடந்த ஜூன் 11ஆம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவர் சுவாசித்து வந்தார். அவரது உடல் நிலை நேற்று பிறபகல் மிகவும் மோசமடைந்தது.

பிரதமர் நரேந்திர மோடி புதனன்றும் வியாழன்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இன்று மருத்துவமனையில் முக்கால் மணி நேரம் மோடி தங்கி இருந்தார். மத்திய அமைச்சர்கள், பாஜகவினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் புதன் நள்ளிரவும் வியாழக்கிழமை 10.30 மணிக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில், ''முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிக மோசமடைந்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருகிறார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

எயம்ஸ் மருத்துவமனையில் பாஜக தொண்டர்களும் தலைவர்களும் கூடி வருகிறார்கள். மத்திய அமைச்சரவை இரங்கல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மத்திய அமைச்சரவை மாலை 6:30 மணியளவில் கூடுகிறது.

Label