OUR CLIENTS
பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது
பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது Posted on 16-Aug-2018 பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது

இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மம்னூன் ஹூசைன். இவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Label