OUR CLIENTS
கேரள வெள்ள பாதிப்பு: ஆலோசிக்க கூடுகிறது சிறப்பு சட்டசபை
கேரள வெள்ள பாதிப்பு: ஆலோசிக்க கூடுகிறது சிறப்பு சட்டசபை Posted on 21-Aug-2018 கேரள வெள்ள பாதிப்பு: ஆலோசிக்க கூடுகிறது சிறப்பு சட்டசபை

திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த கன மழையால் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 370 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மழை குறைந்து இருப்பதால் வெள்ளநீர் வடிய தொடங்கி இருக்கிறது. நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில், வெள்ள பாதிப்பு தொடர்பாகவும் சேதமதிப்பு குறித்தும், மறு கட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடுவது, மேலும் வரும் 30-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தி அதன் அறிக்கையை கவர்னரிடம் சமர்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Label