OUR CLIENTS
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை: சிரியா
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை: சிரியா Posted on 23-Aug-2016 காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை: சிரியா

டமஸ்கஸ்:
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் நேற்று சிரியா தலைநகர் டமஸ்கஸுக்கு சென்றார். அங்கு சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாதை சந்தித்தார்.

சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கி நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இந்தியா சார்பில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அக்பர் மற்றும் சிரிய அதிபர் இடையிலான சந்திப்பு குறித்து இந்தியாவிற்கான சிரிய தூதார் ரியாத் அப்பாஸ் கூறியதாவது:

சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவும், சிரியாவும் ஒரே கட்டத்தில் உள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை.

சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவுக்கும், சிரியாவுக்கும் இடையே வரலாற்று பூர்வமான உறவு இருந்து வருகிறது. சர்வதேச நிலைமைகள் மாறியுள்ளதை தொடர்ந்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து பல்வேறு நாடுகள் விலகி உள்ளன. சிரியாவின் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

அக்பரின் பயணம் இருநாடுகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இருநாடுகளும் தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

Label