OUR CLIENTS
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு Posted on 27-Aug-2018 கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஆக. 28
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துக்களை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன.

கடந்த 7 ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இதையடுத்து அவர் மீதான அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்ய, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதி சுபாதேவி அறிவுறுத்தியிருந்தார்.

வழக்கறிஞர் குமரேசன் கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து கருணாநிதி மீதான அவதூறு வழக்களைத் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Label