OUR CLIENTS
எனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
எனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு Posted on 27-Aug-2018 எனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு, ஆக. 27
காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரனும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

குமாரசாமி முதல்வராக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களாக எதுவும் பேசாமல் இருந்த சித்தராமையா மக்கள் ஆசி இருந்தால் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று பேசினார். இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கர்நாடக முதல்வர் குமாரசாமி நிருபர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர். அவர்களது எண்ணம் பலிக்காது. செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்வர் பொறுப்பேற்பார் என்று பா.ஜனதா கட்சியினர் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர். அதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை.

கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன். முதல்வர் பதவியை பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யமாட்டேன். எனது அரசு 100 நாட்களை கட்டாயம் நிறைவு செய்யும். பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் முதல்வராக இருக்கும் வரை என்னால் முடிந்தவற்றை செய்வேன். மக்கள் பணியே எனது இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.

Label