OUR CLIENTS
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் நிதின் கட்காரி
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் நிதின் கட்காரி Posted on 27-Aug-2018 கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் நிதின் கட்காரி

புதுடெல்லி,  ஆக. 27  
ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள  மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் மத்திய சாலைகள் மற்றும் பெருவழித்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பாஜக பொதுச் செயலாளர்களில் ஒருவரான முரளிதர ராவும் கலந்துகொள்கின்றனர். இந்தத் தகவலை அமைச்சரின் அலுவலக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதியின் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கோரும் கடிதம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பாரதீய ஜனதா கட்சி சார்பில் பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா கலந்து கொள்வார் என முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அமித் ஷா கலந்து கொள்ளமாட்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் ஸ்வாமி தெரிவித்தார்.

இப்பொழுது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்பது உறுதியாகக் கூறப்படுகிறது. கட்கரியுடன் பாரதீய ஜனதாவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான முரளிதர ராவும் கலந்துகொள்வார் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Label