OUR CLIENTS
டீசல் விலை வரலாறு காணாத உயர்வு
டீசல் விலை வரலாறு காணாத உயர்வு Posted on 27-Aug-2018 டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

புதுடெல்லி, ஆக. 27
இந்தியாவில் டீசல் விலை இதுவரை விற்காத விலைக்கு இப்பொழுது விறகப்படுகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 13 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 14 பைசாவும் உயர்ந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதி பொருள்கள் விலை அதிகரித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. 

இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று (27-07-18) சென்னயில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.94க்கும், டீசல் விலை ரூ.73.38க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைபோல் டில்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.77.91க்கும், டீசல் விலை ரூ.69.46க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பையில் இன்று பெட்ரோல் விலை ரூ.85.38 க்கும், டீசல் விலை ரூ.73.79க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Label