OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி - ப.சிதம்பரம் பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி - ப.சிதம்பரம் பேட்டி Posted on 27-Aug-2018 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி - ப.சிதம்பரம் பேட்டி

சென்னை, ஆக. 27
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தாவில் செய்தியாளரிடம் கூறியதாவது:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் சூழல் மாறிவிட்டது. குறிப்பாக, பசு பாதுகாவல் என்ற பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். பல நூறு ஆண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் கொண்ட மக்களும், அசைவ உணவுப் பழக்கம் கொண்ட மக்களும் பிரச்சினைகள் இன்றியே வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது குறிப்பிட்ட இறைச்சியை வைத்திருப்பதன் காரணமாகவே பலர் அடித்துக் கொலை செய்யப்படுகின்றனர்.

இப்போதைய நிலையில் நாட்டில் ஜனநாயகமும், சுதந்திரமும் அறவே இல்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வில்லை என்பதற்காகத்தான் விடுதலை வேள்வியே தொடங்கியது. அதுபோன்ற நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆனால், அதை திரித்தும், குறைத்தும் கூற மோடி அரசு முயன்று வருகிறது.

புள்ளி விவரங்களை ஒரு போதும் மறைக்க முடியாது. அதை மாற்றியும் அமைக்க முடியாது. அந்த விரக்தியால்தான் முந்தைய காங்கிரஸ் அரசின் மீது பிரதமர் மோடி வீண் பழி சுமத்தி வருகிறார். தலித்துகள், முஸ்லிம்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் தற்போது அச்சுறுத்தலுடன் வாழ்கின்றனர். இந்த நிலை நீடிக்கக் கூடாது. அதற்கு மக்களைவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும். அந்த எண்ணம், தமிழகம், கேரளம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வலுவாக இருக்கிறது.

அத்தகைய சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரண்டால், நிச்சயமாக தேர்தலில் பா.ஜ.க. வீழ்ச்சியை சந்திக்கும். அது போன்றதொரு கூட்டணி அமைந்தால் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்றும் ராகுலுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுமா? என்றும் கேள்வி எழுகிறது. அதனை தற்போது முடிவு செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

Label