OUR CLIENTS
திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து
திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து Posted on 27-Aug-2018 திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

சென்னை, ஆக. 27
திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே சாலையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ தி.மு.க தலைவராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் நிச்சயமாகப் பங்கேற்பேன்” என தெரிவித்தார்.

மேலும், சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று வெறுமனே கூறிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை, அதற்கான வளர்ச்சி இங்கு இல்லை என்றும் கமல்ஹாசன் பேசினார். ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மனிதனை மனிதன் கொன்று உண்ணும் பழக்கம் நின்று 10,000 ஆண்டுகள்தான் ஆகியுள்ளன. இதுபோன்ற சமூக சீர்கேடுகளைக் களையவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

முன்னதாக அந்த விழாமேடையில் நடிகர் பார்த்திபன் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அப்போது “ நான் முதல்வராக வந்தால், முதல் கையெழுத்து, லோக்பால் மசோதாவுக்குத்தான் போடுவேன். தற்போது கொண்டுவந்துள்ள மசோதா வெறும் கண்துடைப்பே” என்று கமல் பேசினார்.

Label