OUR CLIENTS
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து Posted on 28-Aug-2018 திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஆக. 28
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுப்பிரமணியன் சுவாமி, தமிழிசை செளந்தரராஜன், வைகோ, முத்தரசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக  மு.க. ஸ்டாலின் முறைப்படி அறிவிக்கப்பட்டார். திமுக பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்டார். திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில், திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தன்னுடைய அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை துவங்கும் அவர் மகிழ்ச்சியும் வெற்றியும் பெற வாழ்த்துகிறேன் என்று  பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Label