OUR CLIENTS
பணிக் காலத்தில் காலமான ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை- முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்
பணிக் காலத்தில் காலமான ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை- முதல்வர் பழனிச்சாமி வழங்கினார் Posted on 28-Aug-2018 பணிக் காலத்தில் காலமான ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை- முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்

சென்னை,  ஆக. 28
தமிழ்நாடு முதலமைச்சர்   எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (28.8.2018) தலைமைச் செயலகத்தில், பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். 

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா ஆணையிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று 5 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர்  சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label