OUR CLIENTS
திமுக தலைவர் ஸ்டாலின் சவாலை ஏற்கத் தயார் - எச். ராஜா பதிலடி
திமுக தலைவர் ஸ்டாலின் சவாலை ஏற்கத் தயார் - எச். ராஜா பதிலடி Posted on 28-Aug-2018 திமுக தலைவர் ஸ்டாலின் சவாலை ஏற்கத் தயார் - எச். ராஜா பதிலடி

சென்னை, ஆக. 28
திமுக தலைவர் ஸ்டாலினின் சவாலை ஏற்கத் தயார்; களம் காண்போம் என்று பாஜக தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அக்கட்சி யின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் பொதுக் குழுவில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவை காவி மயமாக்கும் பாஜகவுக்கு  பாடம் புகட்டுவோம் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.  
பாஜக எச். ராஜா பதில், இதையடுத்து ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் கொடுக்கும் வகையில் பாஜக தேசியச்
செயலர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவின் தேர்தல் பொதுக்குழுவில் பேசும் பொழுது பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம் என கூறியுள்ளார், திமுக தலைவரின் சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என்று எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

Label