OUR CLIENTS
கேரளாவுக்கு கூடுதல் நிவாரண தொகை ஆளுநரிடம் மோடி தகவல்
கேரளாவுக்கு கூடுதல் நிவாரண தொகை ஆளுநரிடம் மோடி தகவல் Posted on 28-Aug-2018 கேரளாவுக்கு கூடுதல் நிவாரண தொகை  ஆளுநரிடம் மோடி தகவல்

திருவனந்தபுரம், ஆக. 28
கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநில ஆளுநர் பி. சதாசிவத்திடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்: பிரதமர் மோடி கடந்த வாரம் சனிக்கிழமை கேரள ஆளுநர் பி. சதாசிவத்தை வரவழைத்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி - ஆளுநர் சதாசிவம் இடையிலான பேச்சு விவரங்கள் செவ்வாயன்று வெளியாகி உள்ளன.

மத்திய அரசு கேரளாவுக்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது கேரளா தேசிய பேரிடர் நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 562.45 கோடி ரூபாயுடன் சேர்த்து கூடுதலாக வழங்கப்படும். கேரள மக்களுக்கு தேவையான மருந்துகள், குடிநீர், உணவு மற்றும் தானியங்கள் அனைத்தும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கமான நடைமுறைகளை தளர்த்தி இந்த உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுவரை வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் முதல் கட்ட உதவிகள் தான். கேரளா நிலவரம் தொடர்பாக மாநில அரசு கூடுதல் நிதி கோரும் குறிப்பாணையை சமர்ப்பித்த பின் கூடுதல் நிவாரண உதவிகள் ஒதுக்கப்படும் என ஆளுநரிடம் மோடி கூறியதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான மற்றொரு அறிக்கையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்  குறித்து கேரள தலைமை செயலாளர் டாம் ஜோஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகள் அறிவிக்கும் நிவாரண நிதியை ஏற்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தும்படியும் ஆளுநர் பி. சதாசிவத்திடம் தலைமை செயலாளர் டாம் ஜோஸ் கோரியதாக அறிக்கையில் கூறியுள்ளது. 

Label