OUR CLIENTS
கொலைக்கார அரசியலில் குதித்துள்ள பா.ஜ.க. - மம்தா நேரடி குற்றச்சாட்டு
கொலைக்கார அரசியலில் குதித்துள்ள பா.ஜ.க. - மம்தா நேரடி குற்றச்சாட்டு Posted on 28-Aug-2018 கொலைக்கார அரசியலில் குதித்துள்ள பா.ஜ.க. - மம்தா நேரடி குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஆக. 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் குண்டர்களுடன் கைகோர்த்துள்ள பா.ஜ.க. மேற்கு வங்காளத்தில் கொலைக்கார அரசியலில் குதித்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாணவர் அணி பிரிவின் ஆண்டு தினமான இன்று கொல்கத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று உரையாற்றினார். சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கல்மஹால் பகுதியில் பா.ஜ.க. சில இடங்களை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னர் இருந்த குண்டர்கள் தற்போது பா.ஜ.க.வினருடன் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். கொலைக்கார அரசியலின் பக்கம் பா.ஜ.க. திரும்பியுள்ளது என மம்தா குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்காளம் மாநிலத்துக்குள் தேசிய குடிமக்கள் திருத்தப் பட்டியல் தயாரிப்பு பணிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆனால், இதை நிறைவேற்றியே தீருவோம் என பா.ஜ.க.வினர் எங்களுக்கு சவால் விடுகின்றனர். இதற்கு நாங்கள் சரியான பதிலடி தருவோம். நாங்கள் வங்காளத்து புலிகள். இங்குள்ள எந்தவொரு குடிமகனும் வெளிநாட்டினர் என்று குறிப்பிடப்படுவதை நாங்கள் சகித்து கொள்ள மாட்டோம். 

வரும் பாராளுமன்ற தேர்தலில் பணபலம், புஜபலம் ஆகியவற்றுடன் மத்திய அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒழித்துகட்டி,  வெற்றிபெற பா.ஜ.க. துடிக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

Label