OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தல் -பாஜக முதல்வர்ளுடன் பிரதமர் மோடி ஆலோசனை -அமித்ஷா பங்கேற்பு
பாராளுமன்ற தேர்தல் -பாஜக முதல்வர்ளுடன் பிரதமர் மோடி ஆலோசனை -அமித்ஷா பங்கேற்பு Posted on 28-Aug-2018 பாராளுமன்ற தேர்தல் -பாஜக முதல்வர்ளுடன் பிரதமர் மோடி ஆலோசனை -அமித்ஷா பங்கேற்பு

புதுடெல்லி, ஆக. 28
பாராளுமன்ற தேர்தலுக்கு எத்தகைய வியூகம் அமைப்பது என்பது பற்றியும் பா.ஜ.க. முதல்வர்களுடன் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினார்கள். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. ஆட்சியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க் கட்சியான காங்கிரசும் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் சமீபத்தில் மூன்று குழுக்களை அமைத்து அறிவித்தார். அதோடு மாநிலம் வாரியான ஆலோசனை கூட்டத்துக்கும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியும் மாநில பா.ஜ.க. அமைப்புகளை தேர்தலுக்காக தயார்படுத்தத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. முதல்வர்கள் கூட்டம் நடந்தது.

இந்தியாவில் தற்போது 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இதில் 20 மாநிலங்களில் பா.ஜ.க. முதல்-மந்திரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். 5 மாநிலங்களில் பா.ஜ.க. ஆதரவுடன் பிற கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க வரலாற்றில் அந்த கட்சி 25 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது இதுவே முதல் தடவையாகும். எனவே இதை 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில முதல்வர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பீகார் மாநில பா.ஜ.க துணை முதல்வரும் கூட்டத்தில் பங்கேற்றார்.

பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் விவாதித்தனர். அப்போது பிரதமர் மோடி சில அறிவுரைகளை தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் மக்களுக்காக பா.ஜ.க. அரசு செய்து வரும் நலத்திட்ட பணிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் திறம்பட எடுத்துக் கூறி பிரசாரம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டர். பா.ஜ.க. கொண்டு வந்துள்ள 7 முக்கிய திட்டங்கள் பற்றி மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் அமைய வேண்டும் என்று முதல்-மந்திரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுகிறது. எனவே இந்த 3 மாநில சட்டசபை தேர்தலிலும் கூடுதல் கவனம் செலுத்தும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்
.
பாராளுமன்ற தேர்தலுக்கு எத்தகைய வியூகம் அமைப்பது என்பது பற்றியும் பா.ஜ.க. முதல்-மந்திரிகளுடன் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினார்கள். சமீபகாலமாக இந்துக்களின் வாக்குகளை குறி வைத்து ராகுல் காந்தியும் கோவில், கோவிலாக ஏறி இறங்குகிறார். அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இது தவிர தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெற ராகுல் ரகசிய திட்டம் தீட்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த பாதிப்பைத் தடுக்க பா.ஜ.க. சார்பில் எத்தகைய பாணியில் பிரசாரத்தை மாற்றுவது என்றும் இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை விட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்துடன் உள்ளனர். குறிப்பாக 350 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த இலக்கை அடைய எந்தெந்த மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த தேர்தலில் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அபரிதமான வெற்றியை பெற்றது. பெரிய மாநிலங்களில் உள்ள 217 தொகுதிகளில் 190 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு முன்பு போல வெற்றியை எதிர்பார்க்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்று உளவுத்துறை கூறியுள்ளது.

இதனால் மற்ற மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இது பற்றியும் பா.ஜ.க. முதல்வர்களிடம் பிரதமர் மோடி விவாதித்தார்.

Label