OUR CLIENTS
வேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்!
வேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்! Posted on 28-Aug-2018 வேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்!

வேலூர், ஆக. 28-

வேலூரில் சென்னை&பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய பைபாஸ் சாலையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ராசியில்லாத இடத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது தொழிலை விரிவுபடுத்த பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் தி ஹரீஷ் ஃபுட் சோன் சூப்பர் மார்க்கெட்டை வரும் 31ம் தேதி திறக்க உள்ளது. இதன் வாயிலாக நுகர்வோரை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ளது தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்.

வேலூரில் போனியாகாமல் ஈ ஓட்டி வரும் ஜவுளி நிறுவனங்களில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனமும் ஒன்று. இதனுடன் இணைந்து குமரன் தங்கமாளிகையையும் வைத்து, அவர்களுக்கு ஏடிஎம் போன்ற கார்டுகள் வழங்கி துணி எடுக்கும் போது மதிப்பெண் வழங்கி விலையில் தள்ளுபடி வழங்கியெல்லாம் பார்த்து விட்டனர். ஆனால் விற்பனை என்னவோ மந்தமாக இருக்கிறது. வேலூரில் உள்ள காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்ட ஜவுளி கடை முன் ஒப்பிட்டு பார்த்தால் விற்பனையாகாத கடைகள் வரிசையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் வருகிறது. போனியாகாத, ராசியில்லாத, மக்கள் வந்து செல்ல சரியான போக்குவரத்து வசதியில்லாத இடமாக தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இங்கு ஒருமுறை துணி எடுத்தால் அடுத்த முறை யாரும் துணி எடுக்க முடியாமல் பணமின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி ஒரு ராசியான நிறுவனமாக தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் திகழ்கிறது. அதாவது பணமிருந்தாலும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு செல்ல வாடிக்கையாளர்களுக்கு மனம் இருப்பதில்லை.  அதாவது Ôபணம் இருந்தால் மனம் இல்லை. மனம் இருந்தால் பணம் இல்லைÕ. குறிப்பாக ராசியில்லாத நிறுவனம் என்று முத்திரை குத்தியுள்ளனர் பல வாடிக்கையாளர்கள். 

இந்நிலையில், மக்களை ஏமாற்றுவதை தொடர்ந்து,  உள்ளூர் நிறுவனத்தை ஏமாற்றி கையாளும் செயலில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்தான் ஈடுபட்டுள்ளது. அதாவது, எத்தனையோ சூப்பர் மார்கெட் இருந்தாலும் வேலூரில் ஹரீஷ் ஃபுட் சோன் தனித்தன்மையுடன் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
இதை அறிந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்   ஹரீஷ் ஃபுட் சோன் நிறுவனத்தை நூதனமாக கையாண்டு,  தி ஹரீஷ் ஃபுட் சோன் என பெயர் மாற்றி வைத்து கிளை நிறுவனம் என்று தனது வேலூர் கிளையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் புதிதாக தொடங்கவுள்ளது. இதன் விளைவு என்னவென்று ஹரீஷ் ஃபுட் சோனுக்கும், வாடிக்கையாளர்களும் பின்பு உணர்வார்கள் என்று பொதுமக்களிடையே  சலசலப்பு பேச்சு உலாவருகிறது.  

தி ஹரீஷ் ஃபுட் சோன் நிறுவனத்தை திறந்து விட்டால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அப்படியே தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு வருகை தருவார்களாம். அதாவது ஹரீஷ் ஃபுட் சோன் பெயரை பயன்படுத்தி தனது வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம் என்று  இப்படி மனக்கணக்கு போட்டு கொண்டு இப்படி கேவலமாக செயல்படுகின்றனர்.
வேலூர் மாநகர மக்களை முட்டாள்களாக்க பார்க்கின்றனது இந்நிறுவனம்.  சொந்த தயாரிப்பு என்று தம்பட்டம் அடித்து கொண்டு தரமற்ற பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்து பணமாக்கி வருகிறது என பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகின்றனர். 
வியாபாரம் நாளுக்கு நாள் சரிந்து வருவதை பார்த்து நொந்து கொண்ட இந்நிறுவனம் வேலூரில் அதிகமாக விற்பனையாகி வந்த ஹரிஷ் ஃபுட் சோன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி உணவு பொருட்கள் விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட்டை கொண்டு வந்து தனது வளாகத்தில் வைக்க திட்டம் தீட்டினர். அத்தோடு ஹரிஷ் ஃபுட் சோன் நிறுவனத்தின் பெயருக்கு முன்னால் தி ஹரிஷ் ஃபுட் சோன் என்று பெயர் மாற்றி வைத்து தொலைநோக்கு பார்வையுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது. வருங்காலத்தில் தி சென்னை ஃபுட் சோன் என்று கூட பெயரை மாற்றிக் கொள்ள திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கும் ஹரிஷ் ஃபுட் சோன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இந்த நிறுவனத்தின் குள்ளநரித்தனம் இதிலிருந்தே வெளிவந்துள்ளதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஏன் தி சென்னை ஃபுட் சோன் என்று கடை திறக்க கூடாதா? என்ற  கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். நல்ல பெயரும், புகழும் கொண்ட நிறுவனத்தின் பெயரை விளங்காமல், துலங்காமல் கிடக்கும், ராசியில்லாத தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறப் பார்க்கிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இப்படி தரம் தாழ்ந்து சிறிய கடைகளை நாடியுள்ளது வெட்கக் கேடானது என்கின்றனர் ஹரிஷ் ஃபுட் சோனின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள். குறுக்கு வழியில் பணம் தேடிடும் குருட்டு உலகமடா என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. இதே பாணியை கைப்பற்றி குறுக்கு வழியில் வியாபாரம் பெருக்க துடிக்கிறது, அதற்காக முடிவும் செய்து விட்டது இந்நிறுவனம்.

இதே பாணியில் விற்பனையாகாத பொருட்களை தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் கிளை திறந்து உணவு பொருட்களை விற்று காசாக்கி விடலாம் என்று கணக்கு போட்டு திட்டம் தீட்டி செயல்பட ஆரம்பித்துள்ளது. எங்காவது விற்பனையாகாமல் உள்ள உணவு பொருட்களை கொண்டு வந்து நுகர்வோரை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு செயல்பட ஆரம்பித்து விட்டனர் இந்நிறுவனத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் மாநகரில் பல ஜவுளி நிறுவனங்கள், அதாவது எஃப்பிபி உள்ளிட்ட பல பிராண்டுகளின் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் பலவும் வந்துவிட்டன. இதனால் தங்களது மார்க்கெட் நாளுக்கு நாள் சரிந்து படுத்து கொண்டே போவதை அறிந்து கொண்டு இந்த நூதன ஏமாற்று வேலையில் திட்டம் போட்டு செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதற்கு முதல் பலிகடாவானது ஹரிஷ் ஃபுட் சோன். இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்   கருத்து தெரிவித்துள்ளனர். மக்களை ஏமாற்றும் நோக்கோடு செயல்பட்டதால்தான் இந்நிறுவனம் விற்பனையாகாமல் ஈ அடிக்க ஆரம்பித்து விட்டது. இதனை ஈடுகட்ட இதுபோன்ற ஏற்பாடுகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நுகர்வோர் விருப்பம்போல வேறு கடைகளுக்கு செல்வதே சிறந்தது என்றும் இல்லத்தரசிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். 

இந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கட்டடம் கானாற்றை தூர்த்து கட்டப்பட்டுள்ளது. அத்துடன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிசி லேன்ட் இடமும் இதில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. பணியாளர்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை வழங்க வேண்டும் என்று விதி இருந்தும், இதையெல்லாம் மீறி 13 மணி நேரம் வேலை கசக்கி பிழியப்படுகிறது. அதாவது காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை என்றால் பார்த்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் தொடர்ந்து நிற்பதால் பணியாளர்கள் கால்கள் வீக்கம் அடைந்து மிகவும் சிரமப்படுகின்றனர். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் கூட பணியாளர்களை உட்கார விடுவதில்லை. பணியாளர்களை மனிதாபிமானமே இல்லாமல் கசக்கி பிழிகின்றனர். தொழிலாளர் துறை ஆய்வாளர் விலை போய்விட்டாரா என்பதே இங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த இடத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இங்கு நடைபெறும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் பெண் தொழிலாளர்கள் மனதளவில் புழுங்கி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பரவலாக பேச்சு அடிபடுகிறது. பூனைக்கு மணி கட்டுவது யார் என்று தெரியாமல் நிலைமை சென்று கொண்டிருக்கிறது. 

கட்டடத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து தெரிந்து கொள்ள மாநகரின் வரைபடத்தை எடுத்து பார்த்தால் உண்மை வெளிவரும். அத்துடன் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்து கொண்டுள்ளது. இப்படி பல்வேறு முறைகேடுகள் இந்த கட்டடத்தில் உள்ளது. ஸ்லாப் போன்ற கட்டைகளை வைத்து கட்டடம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  இப்படிப்பட்ட நிறுவனமானது மெல்ல கொக்கி போட்டு சாதூர்யமாக ஹரிஷ் ஃபுட் சோனை தனது வலையில் விழ வைத்துள்ளது. இதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். குறுக்கு வழியில் செயல்படும் தி சென்னை சிலக்ஸ் நிறுவனத்தின் சதி வலையில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் ஹரிஷ் ஃபுட் சோன் திணற போவது உறுதி. பசுத்தோல் போர்த்திய புலி என்று சொல்லுவார்கள் அதுபோன்று தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் செயல்படக்கூடியது. இந்நிலையில் ஹரிஷ் ஃபுட் சோனுக்கு ஏற்படப் போகும் பரிதாப நிலையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label