OUR CLIENTS
மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லும் மனோகர் பாரிக்கர்
மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லும் மனோகர் பாரிக்கர் Posted on 29-Aug-2018 மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லும் மனோகர் பாரிக்கர்

மும்பை, ஆக. 29
உடல்நலக்குறைவால் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்காவுகு சென்று சிகிச்சை எடுத்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 

கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.

இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்று இரவு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

Label