OUR CLIENTS
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த வருமானவரி ஆணையருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த வருமானவரி ஆணையருக்கு ரூ.10 லட்சம் அபராதம் Posted on 29-Aug-2018 உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த வருமானவரி ஆணையருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடெல்லி, ஆக. 29
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்து தவறாக வழிநடத்த முயற்சி செய்வதாக கூறி வருமான வரித்துறை ஆணையருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் வருமானவரி விவகாரங்கள் தொடர்பான வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அதே போன்ற வழக்கில் வருமான வரித்துறையின் டெல்லி காசியாபாத் ஆணையாளர் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது எப்படி இந்த மனுவை தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்து தவறாக வழிநடத்த முயற்சி செய்வதாக கூறி வருமான வரித்துறை ஆணையருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தர விட்டனர். நீதிபதிகள் மேலும் கூறியதாவது:- இந்த வழக்கை வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு மிகவும் சாதாரணமான முறையில் கையாள்வது அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற வழக்கில் வருமான வரித்துறை எந்த விளக்கமும் அளிக்காமல் 596 நாட்கள் தாமதப்படுத்தியது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் தற்போதும் மனு தாக்கல் செய்து கோர்ட்டை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்பார்க்கிறது. எனவே ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 4 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டின் சட்டப் பிரிவில் செலுத்த வேண்டும். அது இந்த நிதியை சிறுவர் நீதிமன்ற விவகாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Label