OUR CLIENTS
தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் கருணாநிதிக்கு நாளை நினைவு அஞ்சலி கூட்டம்
தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் கருணாநிதிக்கு நாளை நினைவு அஞ்சலி கூட்டம் Posted on 29-Aug-2018 தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் கருணாநிதிக்கு நாளை நினைவு அஞ்சலி கூட்டம்

சென்னை, ஆக. 29
சென்னையில் நாளை ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 17&ந்தேதி திருச்சியில் ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 19&ந்தேதி மதுரையில் இரங்கல் கூட்டம் நடந்தது. ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்று பேசினார்கள்.

கோவையில் 25&ந்தேதி ‘மறக்க முடியாத கலைஞர்’ என்ற தலைப்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் கலைத்தொண்டு பற்றி பேசினார்கள். 26&ந்தேதி நெல்லையில் ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் கருணாநிதி நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாளை சென்னையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, டெல்லி மேல்&சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான குலாம்நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பேசுகிறார்கள். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்து வருகிறது. 

Label