OUR CLIENTS
சாதி, மத அமைப்பின் உறுப்பினர்களுக்கு மக்கள் மன்றத்தில் அனுமதியில்லை- ரஜினி அறிவிப்பு
சாதி, மத அமைப்பின் உறுப்பினர்களுக்கு மக்கள் மன்றத்தில் அனுமதியில்லை- ரஜினி அறிவிப்பு Posted on 29-Aug-2018 சாதி, மத அமைப்பின் உறுப்பினர்களுக்கு மக்கள் மன்றத்தில் அனுமதியில்லை- ரஜினி அறிவிப்பு

சென்னை, ஆக. 30
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் வருகையை அறிவித்த ரஜினிகாந்த் கட்சிக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். கட்சி தொடங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் ரஜினி, உறுப்பினர்களை சேர்க்க தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.

அதில், சாதி மதம் சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினர்களாக உள்ளவர்கள் மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதி இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பொறுப்போ அல்லது பதவியோ வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  தனிநபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது எனவும், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிடும்போது கண்ணியம் காக்க வேண்டும் என்றும் மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

Label