OUR CLIENTS
காட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்!
காட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்! Posted on 30-Aug-2018 காட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்!

வேலூர், ஆக. 30-

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டுக்குள் காட்பாடியில் போக்குவரத்து சோதனைச் சாவடி கிறிஸ்டியான்பேட்டையில் செயல்படுகிறது. இங்கு செய்தியாளர்களுக்கு மாதந்தோறும் மாமூல் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கிறிஸ்டியான்பேட்டையில் போக்குவரத்து சோதனைச் சாவடி செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவர் இந்த அலுவலகத்தில் ஒரு நோட்டை பராமரித்து வருகிறார். அதில் செய்தியாளர்களுக்கு மாதா மாதமும், சிலருக்கு வாரந்தோரமும் மாமூல் கொடுப்பதாகவும், அதில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குறித்து வைத்துள்ளாராம். 

இதனால் எந்த செய்தியாளர் சென்றாலும் ஒருமையில் பேசி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்களாம். எந்த தகவல் கேட்டாலும் எங்களால் சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்களாம். அத்துடன் இந்த அலுவலகத்துக்கு சற்றுமே தொடர்பில்லாத வெளியாட்களை (உள்ளூர் நபர்களை) பணிக்கு வைத்து கொண்டு வெளிமாநில வாகன ஓட்டுநர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்களாம் இங்கு பணியாற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள். 

ஒவ்வொரு மோட்டார் வாகன ஆய்வாளரும் கப்பல் போன்ற கார்கள் வைத்துள்ளனர். பங்களா போன்ற வீடு ஆடம்பரம் என்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் விருப்பம்போல வெளியாட்களை பணியமர்த்தி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதை கண்டுகொள்வார் யாரும் இல்லை. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினால் பல கோடி பெருமானமுள்ள நகை, பணம், இதர சொத்துக்களை கைப்பற்றலாம் என்று சொல்கின்றனர் விஷயம் அறிந்த வட்டார போக்குவரத்து துறை ஊழியர்கள். முறையாக பணியாற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஏன் செய்தியாளர்கள் என்று கூறிக்கொண்டு வரும் நபர்களுக்கு மாமூல் கொடுத்து  வருகின்றனர் என்பது மட்டுமே புரியாத புதிராக உள்ளது. மாதந்தோறும் 10ம் தேதி இந்த மாமூல் தொகை வழங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதிலும் லஞ்சம் புரையோடிவிட்டதால் வசூலாகும் ஒரு தொகையில் சிறிய அளவை செய்தியாளர்களுக்கு வாய்முட்டு போட்டு அடைத்து விடுகின்றனர் சாதுர்யமாக என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் இங்கு அரங்கேறி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினால் கணக்கில் வராத பணம் பல லட்சம் கைப்பற்றலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். செய்தியாளர்களுக்கு கையூட்டு தருவது ஏன் என்ற மர்மம் விலகாமல் உள்ளது. அப்படி என்றால் இந்த அலுவலகத்தில் பல முறைகேடுகள் நடப்பது உண்மை என்றே வைத்து கொள்ளலாம் போலிருக்கிறது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். அமைச்சரின் விளக்கத்துக்காக காத்திருப்போம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Label