OUR CLIENTS
அடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு!
அடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு! Posted on 30-Aug-2018 அடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு!

வேலூர், ஆக. 30-

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வெளியே நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ், வாடகை கார்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேற்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் மனு கொடுக்க வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் 55 ஆம்புலன்ஸ், கார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. மருத்துவமனை ஆரம்பமானது முதலே நாங்கள் இங்கு டாக்சி ஸ்டாண்ட் அமைத்து செயல்பட்டு வருகிறோம். 

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்த இடத்தில் இருக்க வேண்டாமென கூறிவிட்டார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது அங்கு டாக்சி ஸ்டாண்ட் என்கிற பெயரில் கும்பலாக அமர்ந்து சீட்டாடுவது, குடிப்பது என சிலர் செய்வதாலும், மருத்துவமனையினுள் எந்த நோயாளி சாகும் தருவாயில் உள்ளாரோ அவரது உறவினர்களிடம்  ஆம்புலன்ஸ் தரப்பினர் சிலர் சென்று உங்கள் உறவினர் மருத்துவமனையில் இறந்தால் அவரது உடலை பிரேதபரிசோதனை செய்துதான் உங்களிடம் கொடுப்பார்கள். எனவே இப்போதே டிஸ்சார்ஜ் செய்து சென்றுவிடுங்கள் என பேசி ஆம்புலன்சுக்கு சட்டவிரோதமாக ஆள்பிடிக்கின்றனர். நோயாளிகளை அழைத்துச்செல்ல வேண்டிய இடம் மிக அருகில் இருந்தாலும் கூட இவர்கள் அதிகமாக பணம் கேட்டு வாங்குகிறார்கள்.

பொதுமக்கள், நோயாளிகளின் உறவினர்கள் என சாதாரண மக்கள் செல்ல முடியாத அவசர வார்டுகளில் இந்த ஆம்புலன்ஸ்காரர்கள் சர்வசாதாரணமாக சென்று வருவதும், கட்டணக்கொள்ளை அடிப்பதும் மருத்து வமனையிலுள் உள்ள சில ஊழியர்களை இவர்கள் நட்பாக்கி கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என மருத்துவமனையில் சிலர் தெரிவித்தனர். நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வரும் மக்களை மேலும் நோகடிக்காமல் இயன்றவரை அவர்களுக்கு உதவிகள், வசதிகள் செய்துதர மருத்துவமனை நிர்வாகம் முன்வரவேண்டும். ஆம்புலன்ஸ், டாக்சி, மற்றும் ஆட்டோக்காரர்கள் சேவைநோக்குடன் உரிய நியாயமான கட்டணத்தை வசூலிக்க முன்வரவேண்டும் என்பதே  அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

Label