OUR CLIENTS
இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்து
இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்து Posted on 30-Aug-2018 இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்து

சென்னை, ஆக. 30
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர்  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்..

சென்னை - சிஐடி நகரில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். ஸ்டாலினுடன் துரைமுருகனும் உடன் சென்றார்.

முன்னதாக ஸ்டாலின் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label