OUR CLIENTS
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா- முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா- முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு Posted on 30-Aug-2018 எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா- முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

சேலம், ஆக. 30
சேலம் மாவட்டம் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சேலத்தை அடுத்த எடப்பாடியில் உள்ள தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் பழனிசாமியுடன், மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்றதை அடுத்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Label