OUR CLIENTS
சமாஜ்வாடியை உடைக்க பா.ஜ. சதி -அகிலேஷ்யாதவ் குற்றச்சாட்டு
சமாஜ்வாடியை உடைக்க பா.ஜ. சதி -அகிலேஷ்யாதவ் குற்றச்சாட்டு Posted on 30-Aug-2018 சமாஜ்வாடியை உடைக்க பா.ஜ. சதி -அகிலேஷ்யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ, ஆக. 30
சமாஜ்வாடியை உடைக்க பா.ஜ.சதி செய்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக அகிலேஷ்யாதவ்குற்றம் சாட்டினார்.

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி செல்வாக்காக உள்ளது. அதன் நிறுவனர் முலாயம்சிங்யாதவிடம் இருந்து கட்சிப்பொறுப்புகளை மகன் அகிலேஷ்யாதவ் மாற்றிக்கொண்டார். இதன்பிறகு முலாயம் ஓரம் கட்டப்பட்டார். அவரது தம்பி சிவபால்யாதவையும் அகிலேஷ் கண்டுகொள்ளவில்லை. எனவே அவர் பா.ஜ.வில்சேருவதற்கான ஏற்பாடுகளை அமர்சிங் எம்.பி. செய்தார். ஆனால் சிவபால் வரவில்லை. இந்தநிலையில் சிவபால்யாதவ் நேற்று புதிய கட்சியை துவக்கிஉள்ளார்.சமாஜ்வாடி மதச்சார்பற்ற மோர்சா என்று பெயரிட்டுள்ளார். தன்னை கடந்த இரு ஆண்டுகளாக புறக்கணித்ததால் தான் இந்த முடிவு எடுத்ததாக அவர் கூறினார்.

இது பற்றி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவிடம், நிருபர்கள் கேட்டனர். அதற்கு அகிலேஷ் பதில் அளிக்கையில், லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் இதே போலநிறைய நீங்கள் பார்க்கலாம். இதன்பின்னணியில் பா.ஜ.சதி இருக்கிறதா என்று நினைக்கவில்லை.ஆனால் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட முன்னேற்றங்களை பார்க்கிற போது அந்த சந்தேகம் வலுத்துள்ளது.  என்ன வந்தாலும் சரி.. அத்தனை தடைகளையும் உடைத்து சமாஜ்வாடி தொடர்ந்து முன்னேறும். பிரச்னைகளில்இருந்து திசை திருப்ப வைப்பதே அவர்களின் பலம். பா.ஜ.அரசுகளில் உ.பி.யில்தான் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம். என்றார்.

சமாஜ்வாடி பிளவில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு குடும்பத்தின் ஆளுகையில் நடக்கிற கட்சிகள் எல்லாம் இப்படித்தான் சிதறுண்டு போகும் என்று உ.பி. பா.ஜ. மீடியா ஒருங்கிணைப்பாளர் ராகேஷ்திரிபாதி கூறினார்.

Label