OUR CLIENTS
தமிழகத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது-முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது-முதல்வர் பழனிசாமி Posted on 30-Aug-2018 தமிழகத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது-முதல்வர் பழனிசாமி

சேலம், ஆக. 30
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசும்போது, தமிழத்தில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

கோனேரிப்பட்டியில் ரூ.98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மருத்துவத் துறையில் இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. முாசேலம் மாவட்டத்தில் 11 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

உபரிநீரை முறையாக பயன்படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பருவமழையில் உபரிநீர் வீணாகாது. வண்டல் மண்ணை அள்ளுவதால் ஏரிகள் ஆழமாகின்றன. ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேட்டூர் அணையின் உபரிநீரை எடுத்து சேலத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ. 292 கோடியில் 62 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி கூறினார். எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி விரிவுபடுத்தப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

எடப்பாடி - நெடுங்குளம் - கோனேரிப்பட்டி - ஆனந்தம்பாளையம் சாலை வழி தடுப்பணை 111 கி.மீ. 7/6இல் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி. விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். அந்நிகழ்வில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரோஹிணி ரா. பாஜிபாகரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Label