OUR CLIENTS
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு சட்ட ஆணையம் பரிந்துரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு சட்ட ஆணையம் பரிந்துரை Posted on 31-Aug-2018 ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு சட்ட ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி, ஆக. 31-

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறையை அமல்படுத்தலாம் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை பாஜக தலைமையிலான மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நடைமுறையின்படி தேர்தல் செலவினங்களை குறைத்து, நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த திட்டத்தால்  நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வரைவு அறிக்கையும், அதற்காக அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சட்ட ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அதன்படி, நாட்டில் தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டு வருவதை தவிர்க்க, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையே தீர்வு என்று சட்ட ஆணையம் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையை தவிர்த்து, மற்ற அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சட்ட ஆணையம் கூறியுள்ளது.

இந்த நடைமுறையால் பொதுமக்களின் வரிப்பணம் சேமிக்கப்படுவது மட்டுமின்றி, தேர்தல் தொடர்பான பணிச்சுமை அரசு நிர்வாகத்திற்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் குறையும் எனவும் சட்ட ஆணையம் ஆலோசனை தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால், தொடர்ந்து தேர்தல்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளில் அரசு ஈடுபட முடியும் என சட்ட ஆணையம் கூறியுள்ளது. அதேசமயம், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின்படி இந்த நடைமுறை சாத்தியமாகாது என்றும் அதற்கு அரசியல் சாசனப் பிரிவு 172-ல் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்த முறை சாத்தியமாகும் என்றும், இதற்கு மாநில அரசுகளின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம் எனவும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Label