OUR CLIENTS
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு தனி வழி!
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு தனி வழி! Posted on 31-Aug-2018 நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு  தனி வழி!

சென்னை, ஆக. 31-

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி களில் பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் விஐபி&க்களுக்கு தனி வழி ஏற்படுத்தாவிட்டால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு அரசுப் போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்க கட்டண நிலுவையை செலுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கிய விஐபி&க்களின் வாகனங்கள் செல்ல சுங்கச்சாவடிகளில் தற்போது தனி வழி இல்லை. இதனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வாகனங்கள் கூட வரிசையில் காக்க வைக்கப்படுகிறது. 

வாகனங்களின் நீதிபதிகளுக்கான அடையாள சின்னம் இருந்தும், ஓட்டுநர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்த பிறகும்கூட சில இடங்களில் தேவையின்றி பிரச்னையில் ஈடுபட்டு தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பணியில் உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய விஐபி&க்களின் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் தனி வழித்தடங்களை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Label