OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தல்- தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை தொடங்கிய காங்கிரஸ்
பாராளுமன்ற தேர்தல்- தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை தொடங்கிய காங்கிரஸ் Posted on 04-Sep-2018 பாராளுமன்ற தேர்தல்- தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை தொடங்கிய காங்கிரஸ்

புதுடெல்லி, செப். 4
பாராளுமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை காங்கிரஸ் தொடங்கி இருக்கின்றன.

பாராளுமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடக்க இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் இப்போதே தொடங்கி இருக்கின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் வலுவான வெற்றியைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கட்சியும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களை மிகவும் கவர வேண்டும் என்பது முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இதற்காக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கமிட்டி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியில் சக்திவாய்ந்த தலைவரும், நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சல்மான்குர்ஷித், ஜெயராம் ரமேஷ், குமாரி செல்ஜா, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் பூடா, இளம் தலைவர்களான பஞ்சாப் மந்திரி மான்பிரித் பாதல், மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ், சச்சின்ராவ், முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கமிட்டியின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது பாராளுமன்ற தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். அதில், இளைஞர்களை கவரும் திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள், சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை இடம்பெற செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மக்களிடம் எடுபடக்கூடிய கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பது என்றும் ஆலோசித்தனர். இதன் அடுத்த கூட்டம் வருகிற சனிக்கிழமை நடை பெறுகிறது. அப்போது மேலும் விரிவான ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டம் அடுத்தடுத்து பல தடவை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு முழு அறிக்கை தயாரிக்கப்படும்.

இது சம்பந்தமாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, 2014 தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை முழுமையாக கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க இருக்கிறோம் என்று கூறினார்.

Label