OUR CLIENTS
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரைத்தார் தீபக் மிஸ்ரா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரைத்தார் தீபக் மிஸ்ரா Posted on 04-Sep-2018 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரைத்தார் தீபக் மிஸ்ரா

புதுடெல்லி, செப். 4
உச்ச நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரைத்து தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் 2018, அக்டோபர் 2ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளது. அடுத்த தலைமை நீதிபதி யார் என பரிந்துரைக்கும்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார். நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, உச்ச நீதிமன்றத்தில் மூப்பு அடிப்படையில் இருப்பவரே அடுத்த தலைமை நீதிபதியாக முடியும்.

அந்த அடிப்படையில் ரஞ்சன் கோகாய் அடுத்த இடத்தில் இருப்பதால், அவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்த சனிக்கிழமை பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பின்னர் இது இறுதி செய்யப்படும். ஒப்புதல் பெறப்படும் பட்சத்தில் ரஞ்சன் கோகோய் வரும் அக்டோபர் 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Label