OUR CLIENTS
ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை!
ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை! Posted on 05-Sep-2018 ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை!

வேலூர், செப். 5-

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் மோகன் வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆந்திராவில் இருந்து 16 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனம் (லாரி) ஆந்திர பதிவு எண் கொண்டது. கடந்த 31.08.2018 அன்று இரவு தமிழக பகுதியான வேலூர் மாவட்டம், பொன்னைக்கு வந்துள்ளது. இந்த லாரி அங்கு பாரத்தை இறக்கி விட்டு மீண்டும் பொன்னையில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. 
இந்நிலையில் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் மோகன் என்பவர் இந்த லாரியை வாகன தணிக்கையின் போது ராணிப்பேட்டை அருகே பிடித்துள்ளார். அப்போது அங்கே உள்ள யூனிட்1, 2, 3 என்று கூறப்படும் பகுதியில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு அந்த லாரியின் ஓட்டுநர் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் கேட்காமல் லாரியை நிறுத்தி ஓரங்கட்டு என்று கூறியதோடு பேரம் பேச ஆரம்பித்துள்ளார் மோகன்.

இதுகுறித்து தகவலறிந்த செய்தியாளர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அவர் தொலைபேசியை வாங்க மறுத்துவிட்டார். அத்துடன் அந்த லாரிக்கு ரூ.10 ஆயிரம், ரூ.9,500 என்று ஓவர் லோடு அபராதத் தொகை போட வேண்டும் என்று பேசிக் கொண்டே இருந்தார். தன்னை ஒரு நேர்மையான அதிகாரி போன்று வெளியில் காட்டிக் கொண்டார். அதோடு அவர் பசுத்தோல் போர்த்திய புலி என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் பணம் கொடுத்து விட்டு லாரியை எடுத்துச் செல் என்று அந்த லாரி ஓட்டுநரிடம் கறாராக கூறியுள்ளார் நேர்மையான அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன். இதற்கிடையே போக்குவரத்து துறை இணை ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது நான் இதில் தலையிட முடியாது என்று கூறி அவர் மறுத்து விட்டார்.

ஆனால் மோகன் தான் நேர்மையாக பணியாற்றும் அதிகாரி போன்று காட்டிக் கொண்டு அந்த லாரி ஓட்டுநரை அலைகழித்துள்ளார். பேரம் படிய ஆரம்பித்தது. இரவு 11 மணிக்கு மேல் ஆனதும் பணத்தை செலுத்தி விடு என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அமைதி காத்துள்ளார். இந்த பிரச்னை இரவு 7.40 மணி முதல் நீடித்து வந்துள்ளது. பின்னர் ஒரு வழியாக பேரம் பேசி முடிக்க ராணிபேட்டையைச் சேர்ந்த மூன்று எழுத்து கொண்ட டிரான்ஸ்போர்ட் லாரி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வந்து மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனிடம் பேரம் பேசி முடித்துள்ளனர். இதில் கையூட்டு பெற்றுக் கொண்டு அந்த லாரி மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் அப்படியே விட்டு விட்டார் இந்த கடமை வீரன் மோகன். இப்படி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்று அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுத்தி இருப்பார். 

இப்படி அரசுக்கு சேர வேண்டிய பணத்தை தனது பாக்கெட்டுக்கு மாற்றிக் கொண்டிருக்கும் மோகன் போன்றோரை அலுவலகத்துக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இவரது இல்லத்தில் அரசு பணத்தை கொள்ளையடித்து சேமித்து வைத்துள்ளதை முழுவதுமாக பறிமுதல் செய்ய வேண்டும். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர் மீது விசாரணைக்கு போக்குவரத்து துறை உத்தரவிட வேண்டும். இதில் பேரம் பேசி எவ்வளவு தொகையை கையூட்டாக வாங்கினார் என்பதே தெரியாது. அவர் இந்த லாரி மீது வழக்குப்பதிவு செய்தாரா? இல்லையா? என்பது மர்மமாக உள்ளது. அரசு கஜானாவை நிரப்புங்கள் என்றால் அரசு அதிகாரியான மோகன் தனது வீட்டு கஜானாவை நிரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவர் மீது வேலூர் இணை போக்குவரத்து ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  இரவில் நடந்தது என்னவென்பது மர்மமாகவே உள்ளது. இதுபோன்ற அலுவலர்கள்தான் வட்டார போக்குவரத்து  துறையில் உள்ள கருப்பு ஆடுகள் ஆவர்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதுபோன்ற மோட்டார் வாகன ஆய்வாளர்களின் பின்புலத்தை நாடிப்பிடித்து பார்த்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

Label