OUR CLIENTS
பிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை!
பிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை! Posted on 05-Sep-2018 பிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை!

புதுச்சேரி, செப். 5-

புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக பெறப்பட்ட 50 இடங்களில் உள்ள 17 அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிரப்பி புதுவை அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.

இந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களை 100&ல் இருந்து 150 &ஆக உயர்த்திக் கொள்ள கடந்த ஆக.28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் 50 இடங்களை நிரப்ப வேண்டும் என சென்டாக் அதிகாரிகளிடம் பிம்ஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

அதனையடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்காக திங்கள்கிழமை கலந்தாய்வு நடத்த சென்டாக் ஏற்பாடு செய்தது. உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், மருத்துவக் கவுன்சிலின் அனுமதியில்லாததால் கவுன்சிலிங் ஏற்பாட்டை திடீரென புதுவை அரசு ரத்து செய்தது. ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி 50 எம்எபிபிஎஸ் இடங்களையும் சென்டாக் இணையதளத்தில் உள்ள தரவரிசை பட்டியலின் படி நிரப்பியது. ஆனால், விதிகளை மீறி 17 அரசு ஒதுக்கீட்டு இடங்களை இந்தக் கல்லூரி நிரப்பியுள்ளதாகவும், இதை உடனடியாக ரத்து செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுவை அரசு எச்சரிக்கை செய்தது. இதைத் தொடர்ந்து
17 அரசு ஒதுக்கீட்டு இடங்களை புதுவை அரசே நிரப்பிக் கொள்ளலாம் என பிம்ஸ் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னஞ்சலில் தெரிவித்தது.

இந்த நிலையில், நள்ளிரவில் ஆலோசனை நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், சென்டாக் அதிகாரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான 17 இடங்களுக்கான மாணவர் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கலந்தாய்வு செய்து வெளியிட்டனர். அவர்கள் உடனடியாக கல்லூரியில்சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதில், புதுச்சேரியைச் சேர்ந்த 14 மாணவர்களும், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 3 மாணவர்களும் என 17 மாணவர்கள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கான சேர்க்கை ஆணை திங்கள்கிழமை வழங்கப் பட்டது.

Label