OUR CLIENTS
மரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்!
மரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்! Posted on 05-Sep-2018 மரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்!

விழுப்புரம், செப். 5-

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி, மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி, பள்ளி ஆசிரியர் ஓவியம் வரைந்து அசத்தினார்.

திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் சு.செல்வம். சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு ஓவியம் வரைந்து வருகிறார்.

திங்கள்கிழமை இவர், பிள்ளையார்பாளையம் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி, “அரசுப் பள்ளிகளைக் காப்போம்‘ என்ற வாசகத்தை எழுதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்தை வரைந்தார்.  இது அந்தப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

 இதுகுறித்து ஆசிரியர் சு.செல்வம் கூறுகையில், இதுபோன்று பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிற 2020&ஆம் ஆண்டுக்குள் உலக சாதனை புரிவதே தனது லட்சியம் என்றார்.

Label